Notifications
No new notifications.

அஸ்ஹர் கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பொது அறிவித்தல்

 

அஸ்ஹர் கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின்
பொது அறிவித்தல்


ஒரு சமூகத்தின் எழுச்சி கல்வியிலேயே தங்கியிருக்கின்றது. கல்வி அபிவிருத்தியில் ஆசிரியர்களின் பங்களிப்பு பிரதானமானது. ஆசிரியர்கள் எதிர்கொள்கின்ற சவால்களை, தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு எம்மால் முடிந்தளவு பங்களிப்பை வழங்க முடியுமாக இருந்தால் சாதகமான பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம், “இன்ஷா அல்லாஹ்”


அந்த வகையில், அக்குறணையில் கணிசமான ஆசிரியர்கள் வெளிப் பிரதேசங்களிலிருந்து, நீண்ட தூரம் பிரயாணம் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் பெருந்தொகைப் பணத்தை வீட்டு வாடகையாக செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிக்கின்றனர். இதனால் பல்வேறு அசௌகரியங்களை அவர்கள் எதிர்கொள்கின்றமை தெரிய வருகின்றது. 


இதற்கான ஒரு மாற்றுத் திட்டத்தை உங்கள் முன்வைக்க அஸ்ஹர் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்கம் விரும்புகின்றன்றது. அதாவது, எமது ஊரின் பலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். சிலருக்கு மேலதிகமான வீடுகள் இருக்கின்றன. அதில் பலர் தங்களது வீடுகளை மூடி வைத்திருக்கின்றனர் அல்லது பொறுத்தமான ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருக்க்pன்றனர்.


இவ்வாறானவர்கள், இலவசமாக அல்லது ஒரு சிறிய தொகையை வாடகையாகப் பெற்றுக்கொண்டு தங்களது வீடுகளை தூர பிரதேசங்களிலிருந்து அக்குறணைக்கு வந்து கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு வழங்க முன்வருவார்களாக இருந்தால், அது ஊரின் கல்வி வளர்ச்சிக்கு அவர்களால் வழங்க முடியுமான காத்திரமான பங்களிப்பாக அமையும் என திடமாக நம்புகின்றோம்.


அஸ்ஹர் கல்லூரி மாத்திமல்ல, அக்குறணையில் இருக்கின்ற ஏனைய பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் இதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது. எனவே, இத்திட்டம் வெற்றியளிக்க தங்களது வீடுகளை தந்து ஒத்துழைக்க விரும்புகின்றவர்கள் யாராவது இருந்தால், அல்லது ஆசியர்களுக்கான வீட்டு வாடகையை செலுத்தி பங்களிக்க விரும்புவர்கள் இருந்தால் 0777-811904 அல்லது 077-3595904 என்ற வட்ஸப் இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.


பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
அஸ்ஹர் கல்லூரி
அக்குறணை


ஆகஸ்ட 1, 2024


Announcement